அமைச்சர் அன்பரசனின் தாயார் ராஜாமணி காலமானார்: முதல்வர் நேரில் அஞ்சலி
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், தமிழக தொழில் துறை அமைச்சருமான த.மோ. அன்பரசனின் தாயார் ராஜாமணி(83) வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று வியாழக்கிழமை இரவு காலமானார்.
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், தமிழக தொழில் துறை அமைச்சருமான த.மோ. அன்பரசனின் தாயார் ராஜாமணி(83) வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று வியாழக்கிழமை இரவு காலமானார்.
இதனையடுத்து, சென்னையை அடுத்த குன்றத்தூரில் உள்ள அமைச்சரின் பூர்வீக இல்லத்தில் ராஜாமணி உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.
குன்றத்தூரில் இன்று மாலை ராஜாமணியின் இறுதி சடங்குகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
இந்நிலையில், அன்பரசனின் இல்லத்திற்கு நேரில் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், ராஜாமணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு அன்பரசனுக்கு ஆறுதல் கூறினார்.
முதல்வருடன் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படிக்க | நாட்டின் ஆன்மாவை அவமதிக்காதீர்கள்: ராகுல் காந்தி ட்வீட்