தமிழ்நாடு

2024-ல் ஒரே நாடு ஒரே தேர்தல் வர உள்ளது: எடப்பாடி பழனிசாமி

DIN

2024-ல் ஒரே நாடு ஒரே தேர்தல் வரவிருப்பதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கரூா் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித்தோ்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ஐஎஸ்ஐ முத்திரை மாதிரி அதிமுக. கட்சி இருக்கிற வரை அதிமுகவினர் இருப்பர். 

திமுக கட்சி தேய்பிறை மாதிரி தேய்ந்துகொண்டே செல்கிறது. திமுக அமைச்சரவையில் 8 அமைச்சர்கள் அதிமுகவில் இருந்து சென்றவர்கள். இந்த மாவட்டத்தின் அமைச்சர் ஏற்கெனவே பல கட்சிக்கு போனவர். இப்போது திமுகவில் இருக்கிறார். அடுத்த தேர்தலில் செந்தில்பாலாஜி எந்த கட்சிக்கு போவார் என்பதே தெரியாது. 
திமுக அரசு தேர்தலை தடுத்துநிறுத்த எவ்வளவோ முயற்சி செய்தது. நேரடி அரசியல்தான் தேவையே தவிர, மிரட்டல் அரசியல் அல்ல. 2024-ல் ஒரே நாடு ஒரே தேர்தல் வர உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT