தமிழ்நாடு

மின்சார ரயில்கள் நாளைமுதல் (பிப்.14) 100% இயங்கும்

DIN

தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் குறைந்த நிலையில் சென்னையில் மின்சார ரயில்கள் நாளை (பிப்.14) முதல் 100 சதவிகிதம் இயங்கும் என்று ரயில்வேத் துறை அறிவித்துள்ளது.

கரோனா பரவல் காரணமாக ரயிலில் பயணிக்க பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இரண்டு தவணை தடுப்பூசி கட்டாயம் என்றும், தடுப்பூசி போடாதவர்கள் ரயிலில் பயணிக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது கரோனா பரவல் குறைந்துள்ளதாலும், பெரும்பாலானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாலும், ரயில்கள் 100 சதவிகிதம் இயங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரயிலில் பயணிக்க இரண்டு தவணை தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டையும் அண்மையில் தெற்கு ரெயில்வே தளர்த்தியது குறிப்பிடத்தக்கது.
  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT