திருச்சி: மணப்பாறை அருகே பாதயாத்திரை பக்தர்கள் மீது லாரி மோதியதில் 3 பேர் பலி
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே, பாதயாத்திரை சென்று கொண்டிருந்த பக்தர்கள் மீது லாரி மோதியதில், சம்பவ இடத்திலேயே 3 பேர் பலியாகினர்.
திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே, பாதயாத்திரை சென்று கொண்டிருந்த பக்தர்கள் மீது லாரி மோதியதில், சம்பவ இடத்திலேயே 3 பேர் பலியாகினர்.
சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த பாத யாத்திரை பக்தர்கள் மீது லாரி மோதிய சம்பவத்தில், திருநாவுக்கரசு, சேகர் மற்றும் ஒரு பெண் உள்பட மூவர் பலி பலியாகினர்.
சமயபுரம் நோக்கி பாதயாத்திரையாகச் சென்ற பக்தர்கள் கூட்டத்தில், அவ்வழியாக காய்கறி ஏற்றி வந்த லாரி மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் மேலும் ரம்யா, மணிகண்டன், முத்துபாண்டி என பெண்கள் உள்ளிட்ட 6 பக்தர்கள் படுகாயமடைந்தனர். தகவலறிந்து நிகழ்விடத்துக்குச் சென்ற நெடுஞ்சாலை விபத்து மீட்புக்குழு மற்றும் காவலர்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அனைவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருநாவுக்கரசு, சேகர் உடல்கள் உடற்கூராய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து மணப்பாறை காவலர்கள் வழக்குப் பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய ஈச்சர் லாரியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.