நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: காலை 11 மணி நிலவரப்படி 21.69% வாக்குகள் பதிவு
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 21.69% வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழ்நாடுநகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: காலை 11 மணி நிலவரப்படி 21.69% வாக்குகள் பதிவு
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 21.69% வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 21.69% வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் என 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாலை 5 முதல் 6 மணி வரை கரோனா நோயாளிகள் வாக்களிக்கலாம் என மாநிலத் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மொத்தம் 2.79 கோடி வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா்.
தேர்தல் முடிவுகள் பிப்ரவரி 22 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 21.69% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதில், மாநகராட்சிகளில் 17.93%, நகராட்சிகளில் 24.53%, பேரூராட்சிகளில் 28.42% வாக்குகள் பதிவாகின. மாநகராட்சிகளில் அதிக அளவாக திருச்சி மாநகராட்சியில் 26.64%, குறைந்த அளவாக தாம்பரத்தில் 6.95% வாக்குகள் பதிவாகியுள்ளன.
இதையும் படிக்க- அகமதாபாத் குண்டுவெடிப்பு: தண்டனையைக் கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்த முக்கிய குற்றவாளி
மாவட்டத்தில் அதிகளவாக அரியலூரில் 30.79%, குறைந்த அளவாக செங்கல்பட்டில் 10.65% வாக்குகள் பதிவாகியுள்ளன. சென்னையை பொறுத்தவரை காலை 11 மணி நிலவரப்படி 17.88% வாக்குகள் பதிவாகி உள்ளன. காலை 9 மணி நிலவரப்படி 3.96% வாக்குகளே சென்னையில் பதிவான நிலையில் 11 மணி நிலவரப்படி 17.88% வாக்குகள் பதிவாகிவிருப்பது குறிப்பிடத்தக்கது.