தமிழ்நாடு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: மேட்டூரில் களைகட்டியது

DIN


சேலம் மாவட்டம், மேட்டூரில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் களைகட்டியது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்கை பதிவு செய்து வருகின்றனர்.

நீண்ட நாள்களுக்கு பிறகு மேட்டூர் நகராட்சி, கொளத்தூர் பேரூராட்சி,வீரக்கல் புதூர் பேரூராட்சி, பிஎன் பட்டி பேரூராட்சி, நங்கவள்ளி வனவாசி மற்றும் ஜலகண்டபுரம் பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று சனிக்கிழமை காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது. 

சட்டப்பேரவைத் தேர்தலை போல அரசியல் கட்சியினரும் சுயேச்சைகளும் போட்டி போட்டுக்கொண்டு வாக்காளர்களை கவர பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனர்.

இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்கை பதிவு செய்து வருகின்றனர்.

வேட்பாளர்கள் வாக்குப்பதிவு இயந்திரம் மாதிரியை கையில் வைத்துக்கொண்டு தங்களது சின்னம் இருக்கும் வரிசையை காண்பித்து அதில் வாக்களிக்கும்படி வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இதனால் உள்ளாட்சித் தேர்தல் திருவிழா கோலம் பூண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT