தமிழ்நாடு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்:  திருவாரூரில் மழையையும் பொருட்படுத்தாமல் ஆர்வமுடன் வாக்களிக்கும் வாக்காளர்கள்

DIN

திருவாரூர்: திருவாரூரில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. மழையையும் பொருட்படுத்தாமல் இளம் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது. 

திருவாரூர் மாவட்டத்தில் 4 நகராட்சிகள் மற்றும் 7 பேரூராட்சிகள் சேர்த்து மொத்தமாக 216 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 282 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் 37 வாக்குசாவடிகள் பதற்றமான அடையாளம் காணப்பட்டுள்ளன.

திருவாரூர் மாவட்டத்தில் 1,07, 425 ஆண் வாக்காளர்களும்,1,17,662 பெண் வேட்பாளர்களும்,10 இதர வாக்காளர்கள் சேர்த்து மொத்தமாக 2,25,097 பேர் மொத்தமாக வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். தேர்தல் பணியில் மொத்தமாக 1364 அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் 1200 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

திருவாரூரில் மழையையும் பொருட்படுத்தாமல் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில் மழையையும் பொருட்படுத்தாமல் வாக்காளர்கள் பொறுமையாக நின்று வாக்களித்து வருகின்றனர். குறிப்பாக இளம் வாக்காளர்கள் பலரும் ஆர்வமுடன் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT