வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலை அடுத்த பிறந்த ஊரான முத்தூரில் மாநில செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.
வெள்ளக்கோவில் நகராட்சி, முத்தூர் பேரூராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு சனிக்கிழமை காலை முதல் தொடங்கி அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது.
முத்தூர் பேரூராட்சியில் 15 வார்டு கவுன்சிலர்களுக்கான தேர்தல் விறுவிறுப்பாகத் தொடங்கியது.
மாநில செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் பிறந்த ஊர் காங்கயம் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட முத்தூராகும். இவர் முத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் காலையிலேயே குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். பின்னர் பேரூராட்சி ஒருசில வாக்குச்சாவடிகளைப் பார்வையிட்டு கள நிலவரங்களைக் கண்டறிந்தார்.
இந்தத் தேர்தலில் வாக்காளர்கள் ஆளும் கட்சி திமுகவுக்கு மிகப்பெரிய வெற்றியை அளிப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.
இதையும் படிக்க | திண்டுக்கல் மாவட்டத்தில் 9 மணி நிலவரப்படி 12% வாக்குகள் பதிவு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.