தமிழ்நாட்டில் புதிதாக 1,051 பேருக்கு கரோனா
தமிழ்நாட்டில் புதிதாக 1,051 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (சனிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் புதிதாக 1,051 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (சனிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 82,053 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 1,051 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 3,561 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 7 பேர் பலியாகியுள்ளனர்.
இதையும் படிக்க | சேலம் மாவட்டத்தில் 5 மணி நிலவரப்படி 70.19 சதவீத வாக்குப்பதிவு
இதுவரை மொத்தம் 33,87,839 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 37,977 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி இன்னும் 18,164 பேர் நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்டங்கள்:
சென்னை - 238
கோவை - 157