பேரறிவாளன் (கோப்புப் படம்) 
தமிழ்நாடு

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை பெற்று வரும் பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

DIN

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை பெற்று வரும் பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தொடர் சிகிச்சைக்காக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை பெற்று வரும் பேரறிவாளன் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டார். இதனால் சிகிச்சைக்காக அவருக்கு பரோல் வழங்கப்பட்டது.

அவருக்கு வழங்கப்பட்ட பரோல் காலம் பிப்ரவரி மாதத்துடன் முடிவடையவுள்ள நிலையில், பேரறிவாளன் பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம், பேரறிவாளனுக்கு 10ஆவது முறையாக பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பேரறிவாளனின் உடல் நிலை மற்றும் கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு நீண்ட விடுப்பு வழங்கிட வேண்டும் என பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் 2021 மே 18 ஆம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடி பிறந்தநாள்: தலைவர்கள் வாழ்த்து!

வைக்கத்தில் பெரியார் சிலைக்கு மரியாதை!

மின்துறை அதிகாரி வீட்டில் ரூ.300 கோடி சொத்து ஆவணங்கள், ரூ.2,18 கோடி பறிமுதல்!

காரில் இருந்து பாமக கொடியை அகற்றிய ராமதாஸ்! ஏன்?

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

SCROLL FOR NEXT