அருப்புக்கோட்டை நகராட்சியின் முன்னாள் நகர்மன்றத் தலைவர் சிவப்பிரகாசம் திமுக சார்பில் 8வது வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பெற்றார். 
தமிழ்நாடு

அருப்புக்கோட்டை நகராட்சியை பெரும்பான்மையுடன் கைப்பற்றியது திமுக

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சியின் மொத்தமுள்ள 36 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் 29 வார்டுகளில் வென்றதன்மூலம் அருப்புக்கோட்டை நகராட்சிமன்றத்தை மீண்டும் திமுக கைப்பற்றியது.

DIN

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சியின் மொத்தமுள்ள 36 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் 29 வார்டுகளில் வென்றதன்மூலம் அருப்புக்கோட்டை நகராட்சிமன்றத்தை மீண்டும் திமுக கைப்பற்றியது.

அருப்புக்கோட்டை நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. கடந்த 19ம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையடுத்து செவ்வாய்க்கிழமை வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்றன. 

இதற்கென அறிவிக்கப்பட்டபடி வாக்கு எண்ணும் மையமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த தேவாங்கர் கலைக் கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு முதலாவதாக தபால் ஓட்டுக்கள் எண்ணும் பணிகள் தொடங்கின.

அதைத்தொடர்ந்து சுமார் நண்பகல் 1 மணி வரை வார்டுவாரியாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, உரிய வெற்றி வேட்பாளர்களுக்கு அதிகாரப்பூர்வமாகத் தேர்தல் நடத்தும் அதிகாரி சான்றிதழ்களை வழங்கினார். இதில், திமுக மற்றும் பிற கட்சிகள், சுயேச்சைகளின் வெற்றி விபரம்..

அருப்புக்கோட்டை நகராட்சி = மொத்தம் 36 வார்டுகள்.

திமுக கைப்பற்றியது = 29 வார்டுகள்.

அதிமுக கைப்பற்றியது = 3 வார்டுகள்.

மதிமுக    கைப்பற்றியது = 1, 

பாஜக     கைப்பற்றியது = 1,

சிபிஎம் கைப்பற்றியது = 1,

சுயேச்சை கைப்பற்றியது = 1.

திமுக பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றதையடுத்து திமுக தொண்டர்கள் திரளாகக்கூடி,பட்டாசு வெடித்து, விதவிதமான மேளங்கள் இசைத்து,ஆடிப்பாடிக் கொண்டாடினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT