முகப்பு
தமிழ்நாடு

வேதாரண்யம் அருகே கடலில் மிதந்த உருளை வடிவ மர்மப்பொருள்: காவல்துறை விசாரணை

வேதாரண்யம் அருகே கடலில் மிதந்த உருளை (சிலிண்டர்) வடிவ மர்மப்பொருளை கைப்பற்றிய கடலோரக் காவல் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Updated On : 3 ஜனவரி, 2022 at 6:09 PM
கடலில் மிதந்து கரை சேர்க்கப்பட்ட உருளை
பகிர்:

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே கடலில் மிதந்து மீனவர் படகில் இன்று (ஜன. 3) கரைக்கு கொண்டு வரப்பட்ட உருளை (சிலிண்டர்) வடிவ மர்மப்பொருளை கைப்பற்றிய கடலோரக் காவல் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வானவன்மாதேவி கடற்கரைக்கு கொண்டு வரப்பட்ட கண்ணாடியிழையால் ஆன உருளை வடிவமுள்ள இந்த பொருள் 10 அடி உயரம், 3 அடி விட்டம், 9, 1/2 அடி சுற்றளவு 9 1/2 அடி இருந்தது. தகவல் அறிந்த கீழையூர் கடற்கரை காவல் நிலைய போலீசார் விசாரித்தனர்.

பின்னர், நாகப்பட்டினத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட உதவி ஆய்வாளர் தமிழ்மணி தலைமையிலான மாவட்ட வெடிகுண்டு நிபுணர்கள் பொருளை பரிசோதனை செய்து, அது வெடிபொருள் இல்லை என்பதை உறுதிப்படுத்தினர். மேலும் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.