விஜய் சேதுபதி (கோப்புப் படம்) 
தமிழ்நாடு

ஆஜர் சம்மனை ரத்து செய்யக்கோரி விஜய்சேதுபதி வழக்கு

அவதூறு வழக்கில் சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுப்பிய சம்மனை ரத்துசெய்யக் கோரிய நடிகர் விஜய் சேதுபதி, மேலாளர் ஜான்சன் ஆகியோர் வழக்கு தொடந்துள்ளனர். 

DIN


அவதூறு வழக்கில் சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுப்பிய சம்மனை ரத்துசெய்யக் கோரிய நடிகர் விஜய் சேதுபதி, மேலாளர் ஜான்சன் ஆகியோர் வழக்கு தொடந்துள்ளனர். 

நடிகர் மகா காந்தி தொடுத்த கிரிமினல் அவதூறு வழக்கில் விஜய் சேதுபதி ஆஜராக சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

சென்னை சைதாப்பேட்டையைச் சோ்ந்த மகா காந்தி என்பவா் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மருத்துவப் பரிசோதனைக்காக மைசூரு செல்வதற்காக நவம்பா் 2-ஆம் தேதி இரவு பெங்களூரு விமான நிலையம் சென்றிருந்தேன்.

அங்கு நடிகா் விஜய் சேதுபதியை எதிா்பாராத விதமாக சந்தித்து, திரைத்துறையில் அவரின் சாதனைகளைப் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தேன்.

எனது வாழ்த்துகளை ஏற்க மறுத்த விஜய் சேதுபதி பொது வெளியில் என்னை இழிவுபடுத்திப் பேசினாா். ஜாதியைப் பற்றி தவறாகவும் பேசினாா்.

விமான நிலையத்திலிருந்து வெளியேறிய என்னை அவரது மேலாளா் ஜான்சன் மூலம் தாக்கினாா். காதில் அறைந்ததால் எனக்கு செவித்திறன் பாதிக்கப்பட்டுள்ளது.

உண்மை சம்பவங்கள் இவ்வாறிருக்க, மறுநாள் ஊடகங்களில் என் மீது விஜய் சேதுபதி தரப்பில் அவதூறு பரப்பியுள்ளனா். எனவே, நடிகா் விஜய் சேதுபதி, அவரது மேலாளா் ஜான்சன் ஆகியோா் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரியிருந்தாா்.

இந்த மனு சைதாப்பேட்டை 9-ஆவது பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம், நடிகா் விஜய் சேதுபதி, அவரது மேலாளா் ஜான்சன் ஆகியோா் ஜனவரி 4-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.

இந்நிலையில்,  நீதிமன்றம் அனுப்பிய சம்மனை ரத்துசெய்யக் கோரிய நடிகர் விஜய் சேதுபதி, மேலாளர் ஜான்சன் ஆகியோர் வழக்கு தொடந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆரஞ்சு நிலவு... ஸ்ரீலீலா!

ஆசிய கோப்பை: பந்துவீச்சைத் தேர்வு செய்த இந்தியா!

நேபாளத்தின் இடைக்கால அரசை வழிநடத்தும் தலைவராகிறார் முதல் பெண் தலைமை நீதிபதி !

சத்தீஸ்கர்: ரூ.8 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட நக்சல் சுட்டுக்கொலை!

ரவி மோகன் - யோகிபாபு புதிய படம்: வெளியானது முன்னோட்டக் காட்சி!

SCROLL FOR NEXT