தமிழ்நாடு

2 நாள்களுக்கு மட்டுமே சட்டப்பேரவைக் கூட்டம்

DIN

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் ஜனவரி 6, 7 ஆகிய இரு நாள்களுக்கு மட்டும் சட்டப்பேரவைக்கூட்டம் நடைபெறும் என்று அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால், இரண்டு நாள்களுக்கு மட்டும் சட்டப்பேரவைக் கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது நாளை, நாளை மறுநாள் விவாதம் நடத்தப்படுகிறது.

கேள்வி நேரம் நேரடி ஒளிபரப்பு

சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின் மீதான முதல்வரின் பதிலுரை நேரலை செய்யப்படும் என்று சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார். 

சென்னை கலைவாணர் அரங்கில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கரோனா பரவும் வேகம் அதிகரித்து வருவதால், இரண்டு நாள்களுக்கு மட்டும் சட்டப்பேரவைக் கூட்டம் நடத்தப்படுகிறது என்று கூறினார். 

மேலும் பேசிய அவர், மறைந்த சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு நாளை இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும்.

கேள்வி பதில் நேரத்துடன் சட்டப்பேரவை தொடங்கும். சட்டப்பேரவையில் கேள்வி நேரம் மட்டும் நேரலை செய்யப்படும். பதிலளிப்பதையும் நேரலை செய்வதற்கு போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படு வருகிறது.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதல்வர் வெள்ளிக்கிழமை பதிலுரை  வழங்குவார். அதனுடன் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நிறைவடையும் என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இராணி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

சிசோடியா ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

‘ஆவேஷம்’ பட டிரெண்டிங்கில் இணைந்த பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT