ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி: முதல்வர் ஸ்டாலின்
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் சமீப காலமாக ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்படும் தற்கொலைகள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்தும் வரும் நிலையில் அவற்றை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கடந்த வாரம் சென்னையை சேர்ந்த வங்கி அதிகாரி ஆன்லைன் சூதாட்டத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் மனைவி குழந்தைகளைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
Advertisement
Advertisement
இந்நிலையில், இன்று சட்டப்பேரவைக் கூட்டத்தில் அதிமுக எம்எல்ஏ வைத்தியலிங்கம் ஆன்லைன் சூதாட்டத்தைப் பற்றி எழுப்பிய கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் ‘விரைவில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்’ எனத் தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.