தமிழ்நாடு

சென்னை எம்.ஐ.டி. கல்லூரியில் மேலும் 60 பேருக்கு கரோனா

DIN

சென்னை குரோம்பேட்டை எம்.ஐ.டி. கல்லூரியைச் சேர்ந்த மேலும் 60 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சென்னை குரோம்பேட்டை பகுதியில் உள்ள மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரி(எம்.ஐ.டி.) மாணவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. 

1,417 பேருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் ஏற்கெனவே 81 பேருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில் இன்று மேலும் 60 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கரோனா தொற்று உறுதியானவர்களில் 90% பேருக்கு ஒமைக்ரான்அறிகுறிகள்  இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவா்கள் விடுதியில்  தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதிப்புக்குள்ளாகாத மாணவா்கள் சொந்த ஊா்களுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கல்லூரி மாணவ, மாணவிகள் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டு இருப்பதைத் தொடா்ந்து தாம்பரம் மாநகராட்சி சுகாதாரத் துறை பணியாளா்கள் விடுதியில் பணிபுரிந்து வரும் இதர ஊழியா்கள், விடுதிக்கு அருகில் உள்ள கடைகளில் பணிபுரியும் ஊழியா்களிடம் கரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT