முகப்பு
தமிழ்நாடு

சென்னை: கரோனா ஊரடங்கு தொடர்பாக பொதுமக்கள் தகவல்கள், ஆலோசனைகள் பெற உதவி எண்கள் அறிவிப்பு 

கரோனா ஊரடங்கு தொடர்பாக பொதுமக்கள் தகவல்கள், ஆலோசனைகள் பெற உதவி எண்களை சென்னை  பெருநகர காவல்துறை அறிவித்துள்ளது.

Updated On : 9 ஜனவரி, 2022 at 3:41 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:35 PM

கரோனா ஊரடங்கு தொடர்பாக பொதுமக்கள் தகவல்கள், ஆலோசனைகள் பெற உதவி எண்களை சென்னை  பெருநகர காவல்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழகத்தில் கரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. மேலும் வார நாட்களில் இரவு 10.00 மணி முதல் காலை 05.00 மணி வரையில் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கும் அறிவித்து அமலில் உள்ளது.
பொதுமக்கள் கரோனா ஊரடங்கு குறித்து தகவல்கள் பெறவும், சந்தேகங்களை கேட்கவும், சென்னை பெருநகர காவல்துறையின் கரோனா கட்டுப்பாட்டறை உதவி மையம் 94981 81236, 9498181239, 72007 06492 மற்றும் 72007 01843 ஆகிய 4 செல்போன் எண்களை அறிவித்துள்ளது.

ஆகவே, பொதுமக்கள் கரோனா ஊரடங்கு குறித்த தகவல்கள் மற்றும் ஆலோசனைகள் பெற சென்னை பெருநகர காவல்துறையின் கரோனா கட்டுப்பாட்டு அறையில் உள்ள மேற்படி 94981 81236, 94981 81239, 72007 06492 மற்றும் 72007 01843 ஆகிய உதவி மைய எண்களுக்கு 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
மேலும், அவசர உதவி தேவைப்படுவோர் காவல்துறை உதவி எண்.100 மற்றும் 112 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளுமாறும், காவலன் SOS செயலியை பயன்படுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.