சென்னை ஐஐடிக்கு புதிய இயக்குநர் நியமனம்
சென்னை ஐஐடியின் புதிய இயக்குநராக பேராசிரியர் காமகோடி நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை ஐஐடியின் புதிய இயக்குநராக பேராசிரியர் வி.காமகோடி நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை ஐஐடியில் இயக்குநராக இருந்த பாஸ்கர் ராமமூர்த்தி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து அப்பணியிடம் காலியாக இருந்தது.
இந்நிலையில் ஐஐடியின் புதிய இயக்குநராக பேராசிரியர் வி.காமகோடி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து, காமகோடி ’உள்நாட்டு தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கான திறன்களை அதிகரிப்பதே உடனடி குறிக்கோள்’ எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், டெல்லி ஐஐடி இயக்குநராக மும்பை ஐஐடி பேராசிரியர் ரங்கன் பானர்ஜி, மாண்டி ஐஐடி இயக்குநராக கான்பூர் ஐஐடி பேராசிரியர் லட்சுமிதர் பெகேரா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.