போகிப் பண்டிகை: சென்னையில் பிளாஸ்டிக் எரித்தால் ரூ. 1,000 அபராதம்
போகிப் பண்டிகை அன்று பிளாஸ்டிக் பொருள்களை எரித்தால் ரூ. 1,000 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி நிர்வாகம் புதன்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளது.
போகிப் பண்டிகை அன்று பிளாஸ்டிக் பொருள்களை எரித்தால் ரூ. 1,000 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி நிர்வாகம் புதன்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்தியில்,
போகி பண்டிகையான நாளை(ஜன.13) சென்னை மாநகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக், டயர்கள் போன்ற பொருள்களை எரித்தால் ரூ. 1,000 அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.
மேலும், அனைத்து மண்டலங்களில் கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.