தமிழகத்தில் 18 ஆயிரத்தை நெருங்கியது தினசரி கரோனா பாதிப்பு
தமிழகத்தில் புதிதாக 17,934 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டது.
தமிழகத்தில் புதிதாக 17,934 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டது.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. புதிதாக 17,934 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 28,47,589 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 4,039 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 19 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
இதையும் படிக்க | பாஜகவிலிருந்து விலகிய அமைச்சரை நெருங்கும் சிக்கல்
சென்னையில் அதிகபட்சமாக 7,372 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை மொத்தம் 27,21,725 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 36,905 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி 88,959 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மாவட்டங்கள்:
- செங்கல்பட்டு - 1,840
- கோவை - 981
- திருவள்ளூர் - 931
- காஞ்சிபுரம் - 620