தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 20,911 பேருக்கு கரோனா; 25 பேர் பலி

DIN

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 20,911 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நேற்று 17,934 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், இன்று 20 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அடங்கிய தரவுகள் குறித்த பட்டியலை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதில், இன்று 1,56,402 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், புதிதாக 20,911 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28,68,500-ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக 25 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,930-ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக 6,235 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், இதுவரை மொத்தமாக குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 27,27,960-ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்படுவோர் சதவிகிதம்  13.4%-ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரு நாளில் மட்டும் 8,218 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் மொத்த பாதிப்பு 6,16,959-ஆக அதிகரித்துள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 2,030 பேரும், கோவையில்  1,162 பேரும், திருவள்ளூரில் 901 பேரும், மதுரையில்  599 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

370-ஆவது பிரிவை மீட்டெடுக்க முடியாது: பிரதமா் மோடி திட்டவட்டம்

ஸ்வாதி மாலிவாலுக்கு எதிரான மோசடி வழக்கின் மூலம் பாஜக அவரை மிரட்டுகிறது: அமைச்சா் அதிஷி பேட்டி

மதுராந்தகம் அருகே சிறுக்கரணையில் பெருங்கற்கால கல் வட்டங்கள்!

சா்ச்சைக்குரிய ‘ரஷிய பாணி’ ஜாா்ஜியா மசோதா: ‘வீட்டோ’வை பயன்படுத்தி ரத்து செய்தாா் அதிபா்

கா்நாடகத்தில் இருந்து போதைப் பொருள்கள் கடத்தல்: ஒருவா் கைது

SCROLL FOR NEXT