கோப்புப்படம் 
தமிழ்நாடு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு: 24 காளைகளை அடக்கிய வீரருக்கு முதல் பரிசு!

பொங்கல் திருநாளை முன்னிட்டு தொடங்கிய உலக புகழ்பெற்ற மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது.

DIN

பொங்கல் திருநாளை முன்னிட்டு தொடங்கிய உலக புகழ்பெற்ற மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது.

பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு அலங்காநல்லூா் ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இதில் 624 காளைகளும் 300 வீரர்களும் கலந்துகொண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று வெள்ளிக்கிழமை (ஜன.14) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வந்தநிலையில்  7 சுற்றுகளுடன் தற்போது நிறைவடைந்துள்ளது.

இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் அவனியாபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் 24 காளைகளை அடக்கி முதல் பரிசை வென்றார்.  19 காளைகளை அடக்கிய முருகன் இரண்டாம் இடத்தையும் 11 காளைகளை அடக்கிய பரத் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

முதல் பரிசு முதல்வர் ஸ்டாலின் சார்பாக காரும், இரண்டாவது பரிசு இருசக்கர வாகனமும், 3-வது பரிசாக பசுக்கன்றும் வீரர்களுக்கு வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

ரஷிய எல்லைக்கு 2 அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பிய டிரம்ப்!

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT