ஞாயிறன்று ஊரடங்கு: காசிமேட்டில் மீன்வாங்கக் குவியும் மக்கள் (கோப்பிலிருந்து) 
தமிழ்நாடு

ஞாயிறன்று ஊரடங்கு: காசிமேட்டில் மீன்வாங்கக் குவியும் மக்கள்

தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், இரவு நேர ஊரடங்கு, ஞாயிறன்று முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

DIN


சென்னை: தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், இரவு நேர ஊரடங்கு, ஞாயிறன்று முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

அத்தியாவசியச் சேவைகள் தவிர, பிற வாகனப் போக்குவரத்துக்குக்கு ஞாயிறன்று தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நேற்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுவதாலும், நாளை ஞாயிறன்று ஊரடங்கு என்பதாலும், மீன் வாங்க ஏராளமானோர் இன்று காலையிலேயே காசிமேடு மீன்சந்தையில் குவிந்தனர்.

காலை முதலே மீன்சந்தைக்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. கரோனா விதிமீறலையும் தாண்டி, ஆயிரக்கணக்கானோர் காசிமேடு மீன்சந்தையில் குவிந்திருப்பதால் கரோனா பரவும் அபாயம் உருவாகியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6-ஆவது முறையாக பிபிஎல் கோப்பை வென்ற பெர்த் ஸ்கார்சிஸ்!

யு19 உலகக் கோப்பை: ஜுவெல் ஆண்ட்ரூ அரைசதம்; மே.இ.தீவுகள் 226 ரன்களுக்கு ஆட்டமிழப்பு!

"மிதுன ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

என் குடும்பம் : கானா வினோத் வீட்டில் கமருதீன் உருக்கம்!

கோவையில் சேற்றில் சிக்கிய காட்டு யானை 3 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மீட்பு

SCROLL FOR NEXT