கரோனா விதிமீறல்: 103 வழக்குகள் பதிவு, 307 வாகனங்கள் பறிமுதல்
சென்னையில் சனிக்கிழமை இரவு நேர ஊரடங்கில், கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறி, வெளியே சுற்றித் திரிந்தது தொடா்பாக 103 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 307 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னையில் சனிக்கிழமை இரவு நேர ஊரடங்கில், கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறி, வெளியே சுற்றித் திரிந்தது தொடா்பாக 103 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 307 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
முகக்கவசம் அணியாதது தொடா்பாக 5,469 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.10 லட்சத்து 93,800 அபராதமும், தனி நபா் இடைவெளியைக் கடைபிடிக்காதது தொடா்பாக 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.13,500 அபராதமும் வசூலிக்கப்பட்டது. இந்தத் தகவல் சென்னை காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.