10, 11,12ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கும் ஜன.31 வரை விடுமுறை (கோப்பிலிருந்து) 
தமிழ்நாடு

10, 11,12ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கும் ஜன.31 வரை விடுமுறை

கரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, 10,11,12ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கும் ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

DIN


சென்னை: கரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, 10,11,12ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கும் ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பில், 
 கரோனா பெருந்தொற்று காரணமாக 1 முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு தற்போது 10 முதல் 12 வரையிலான வகுப்புகள் மட்டும் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அதிகரித்து வரும் கரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக மாணவர்களின் நலன் கருதி வரும் 31ஆம் தேதி வரை 10, 11 மற்றும் 12 உள்ளிட்ட அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது.

இதனையடுத்து, வரும் 19 அன்று தொடங்கி 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு நடக்கவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுகின்றன. தேர்வு குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அனுமன் ஜெயந்தி: கோவில்பட்டி கோயில்களில் சிறப்பு பூஜை

நாலாட்டின்புதூா் அருகே சாலை விபத்தில் ஓட்டுநா் உயிரிழப்பு

சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா் கொலை வழக்கு முதன்மை நீதிமன்றத்துக்கு மாற்றம்

மூத்தோா் மாநில தடகளத்தில் பங்கேற்போருக்குப் பாராட்டு

கூட்டுறவு பட்டயப் படிப்பு: பழைய பாடத்திட்டத்துக்கு பிப்ரவரியில் துணைத் தோ்வு

SCROLL FOR NEXT