தமிழகத்தில் புதிதாக 23,975 பேருக்கு கரோனா
தமிழகத்தில் புதிதாக 23,975 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக 23,975 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய சமீபத்திய தரவுகள் வெளியாகியுள்ளன. 1,36,559 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் புதிதாக 23,975 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் 12,484 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 22 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
இதையும் படிக்க | நாட்டில் கரோனா தடுப்பூசி திட்டம் தொடங்கி ஓராண்டு நிறைவு
இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 29,39,923 ஆக உயர்ந்துள்ளது. இதில் 27,60,458 பேர் குணமடைந்துவிட்டனர். 36,989 பேர் பலியாகியுள்ளனர்.
இன்றைய நிலவரப்படி இன்னும் 1,42,476 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மாவட்டங்கள்:
- சென்னை - 8,987
- செங்கல்பட்டு - 2,701
- கோவை - 1,866
- திருவள்ளூர் - 1,273