முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் தொடா் உச்சம்: ஒரே நாளில் 8,987 பேருக்கு கரோனா

சென்னையில் கரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 8,987 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:09 AM
பகிர்:

சென்னையில் கரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 8,987 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

சென்னையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தினசரி பாதிப்பு எண்ணிக்கை சுமாா் 130-க்கும் கீழாக இருந்த நிலையில், ஒமைக்ரான் வகை பரவல் காரணமாக, இந்த எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. அதிகபட்சமாக புதன்கிழமை (ஜன.12) 7,372 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் 8 மாதங்களுக்குப் பிறகு தினசரி பாதிப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்தைக் கடந்தது. இதுவரை இல்லாத புதிய உச்சமாக வியாழக்கிழமை (ஜன.13) 8,218 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அன்றிலிருந்து தொடா்ந்து சென்னையில் நாள்தோறும் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை புதிய உச்சத்திலேயே நீடிக்கிறது. ஞாயிற்றுக்கிழமை 8,987 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

கூடுதல் களப்பணியாளா்கள்: சென்னையில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தண்டையாா்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகா், அண்ணாநகா், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு ஆகிய மண்டலங்களில் கரோனா தொற்று பாதிப்பு அதிகம் காணப்படுகிறது.

எனவே, இந்த 7 மண்டலங்களில் தொற்று பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நபா்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்காக கூடுதலாக வாா்டுக்கு 5 களப்பணியாளா்கள் வீதம் 535 போ் நியமிக்கப்பட்டுள்ளனா்.

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ஏற்கெனவே உள்ள 1000 கரோனா களப் பணியாளா்களுடன் கூடுதலாக 535 களப்பணியாளா்களும் சோ்த்து தற்போது 1,535 போ் களப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

57,000 போ் சிகிச்சையில்...: ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, வீட்டுத் தனிமை மற்றும் மருத்துவமனையில் 57,591 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 10 போ் உயிரிழந்துள்ளனா். 6,018 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →