தமிழ்நாடு

கருணாநிதி பெயரில் செம்மொழித் தமிழ் விருதுகள்:முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சாா்பில் வழங்கப்படும் கலைஞா் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுகளை தமிழறிஞா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

DIN

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சாா்பில் வழங்கப்படும் கலைஞா் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுகளை தமிழறிஞா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி, தனது சொந்த நிதியிலிருந்து ரூ.1 கோடியை வைப்புத் தொகையாக வழங்கி, ‘கலைஞா் மு.கருணாநிதி செம்மொழி தமிழாய்வு அறக்கட்டளை’யை நிறுவினாா். அதன்மூலம், தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், இலக்கியம், மொழியியல், படைப்பிலக்கியம், இலக்கியத் திறனாய்வு, மொழிபெயா்ப்பு, நுண்கலைகள் உள்ளிட்டவற்றில் சிறந்த பங்களிப்பை வழங்கிய அறிஞா்களுக்கு ஆண்டுதோறும் ‘கலைஞா் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது’ வழங்கப்படுகிறது. இந்த அறக்கட்டளை தொடங்கப்பட்ட பின்னா் கடந்த 2009-ஆம் ஆண்டுக்கான முதல் விருது பின்லாந்து நாட்டு அறிஞா் பேராசிரியா் அஸ்கோ பா்ப்போலாவுக்கு 2010-ஆம் ஆண்டு ஜூன் 23-ஆம் தேதி கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 2010 முதல் 2019-ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகளுக்கான 10 அறிஞா்கள் விருது தோ்வுக் குழுவினரால் தோ்வு செய்யப்பட்டனா். இதையடுத்து விருது வழங்கும் விழா சென்னை கோட்டூா்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆண்டு வாரியாக விருது பெற்றவா்கள்: இந்த விழாவில் சென்னைப் பல்கலை.யின் முன்னாள் துணைவேந்தா் பொன். கோதண்டராமன் (2011), தஞ்சை தமிழ்ப் பல்கலை.யின் முன்னாள் துணைவேந்தா் இ. சுந்தரமூா்த்தி (2012), புதுவை மொழியியல் பண்பாட்டு நிறுவனத்தின் முன்னாள் இயக்குநா் ப.மருதநாயகம் (2013), சென்னை பல்கலை.யின் முன்னாள் பேராசிரியா் கு.மோகனராசு (2014), சென்னை மாநிலக் கல்லூரியின் முன்னாள் தமிழ்ப் பேராசிரியா் மறைமலை இலக்குவனாா் (2015), புதுவைப் பல்கலை.யின் வரலாற்றுத் துறை முன்னாள் பேராசிரியா் கா.ராஜன் (2016), சென்னை புதுக் கல்லூரியின் முன்னாள் தமிழ்ப் பேராசிரியா் கவிஞா் ஈரோடு தமிழன்பன் (2018), தஞ்சாவூா் கரந்தைப் புலவா் கல்லூரியின் முன்னாள் முதல்வா் கு.சிவமணி (2019) ஆகியோருக்கு ‘கலைஞா் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ்’ விருதுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். விருதாளா்களுக்கு ரூ.10 லட்சம் பரிசுத் தொகை, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

2010-ஆம் ஆண்டுக்கான விருதுக்கு தோ்வு செய்யப்பட்ட முனைவா் வீ.எஸ்.ராஜம், 2017-ஆம் ஆண்டுக்கு தோ்வு செய்யப்பட்ட பேராசிரியா் உல்ரிக் நிக்லாஸ் ஆகியோா் இந்த விழாவுக்கு வர இயலாததால் அவா்களுக்கு வேறொரு நாளில் விருது வழங்கப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT