தமிழக தேர்தல் ஆணையம் 
தமிழ்நாடு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: டெபாசிட் 2 மடங்காக உயர்வு

நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர்களுக்கான வைப்புத்தொகை 2 மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

DIN

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர்களுக்கான வைப்புத்தொகை 2 மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 498 பேரூராட்சிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர்களுக்கான வைப்புத்தொகையை மாநிலத் தேர்தல் ஆணையம் 2 மடங்காக உயர்த்தியுள்ளது. இதன்படி, மாநகராட்சி உறுப்பினர் பதவிக்கு ரூ 4,000, நகராட்சி உறுப்பினர் பதவிக்கு ரூ 2,000 காப்புத்தொகை கட்ட வேண்டும். 
பேரூராட்சி உறுப்பினர் பதவிக்கு போட்டியிட ரூ 1,000 காப்புத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பட்டியலினத்தவர், பழங்குடியினர் காப்புத் தொகையில் பாதி செலுத்தினால் போதுமானது என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் காலமானார்!

சிவகார்த்திகேயனுக்கு முன்பே என்னிடம் துப்பாக்கியை வழங்கி விட்டார் விஜய் - நடிகர் உதயா பெருமிதம்

கோவை, நீலகிரிக்கு இன்று ரெட் அலர்ட்!

சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் சிக்கிய லாரி!

உதகைக்கு வந்தடைந்த தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர்!

SCROLL FOR NEXT