வேதாரண்யத்தில் நடைபெற்று வரும் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஓ.எஸ்.மணியன். 
தமிழ்நாடு

தனி பட்ஜெட் மூலம் விவசாயகளுக்கு கிடைத்தது என்ன? - ஓ.எஸ்.மணியன் கேள்வி

திமுக அரசு கொண்டு வந்த விவசாயத்துக்கான தனி பட்ஜெட் மூலம் விவசாயகளுக்கு கிடைத்தது என்ன? என கேள்வி எழுப்பிய முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

DIN


வேதாரண்யம்: திமுக அரசு கொண்டு வந்த விவசாயத்துக்கான தனி பட்ஜெட் மூலம் விவசாயகளுக்கு கிடைத்தது என்ன? என கேள்வி எழுப்பிய முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை நிவாரணம் வழங்காத திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்தார்.

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் பெருமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காததைக் கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று சனிக்கிழமை (ஜன.22) நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார்.

பயிர் பாதிப்புக்காக ஆண்டு சாந்த 100 சதவிகிதம்  நிவாரணம் வழங்கியதோடு,  காப்பீடு, கூட்டுறவு கடன் தள்ளுபடியை அதிமுக அரசு செய்தது.

வேதாரண்யத்தில் நடைபெற்று வரும் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அதிமுகவினர்.

ஆனால், இந்த ஆண்டு பாதிப்புக்காக திமுக அரசு அறிவித்த நிவாரணம் ஏட்டளவில்தான் உள்ளது.

டாஸ்மாக் கடைகள் திறந்துள்ளது அம்மா மினி மருத்துவமனைகள் மூடப்பட்டு விட்டது என குற்றம் சாட்டினார்.

பொங்கல் பரிசு தொகுப்பில் தரம் குறைந்த பொருள்கள் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், அரசால் வழங்கப்பட்ட தரம் குறைந்த வெல்லத்தை காட்டி பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT