தமிழ்நாடு

குடியரசு நாள் விழா: தமிழக ஊர்தி புறக்கணிப்பு; போடியில் ஆர்ப்பாட்டம்

DIN



போடி: புது தில்லியில் குடியரசு நாள் விழாவில் தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து போடியில் அனைத்து கட்சியினர் குடியரசு நாளன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புது தில்லியில் குடியரசு நாள் விழா அணி வகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு இந்த ஆண்டு அனுமதி மறுக்கப்பட்டது. இதனைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

குடியரசு நாளன்று போடியில் திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் போடி வ.உ.சி. சிலை திடலில் நடைபெற்றது.

இதையும் படிக்க.. உத்தரகண்ட் தொப்பி, மணிப்பூர் துண்டு அணிந்து வந்த பிரதமர் மோடி

திராவிடர் கழக நகர செயலர் முருகானந்தன் தலைமை வகித்தார். ஆர்பாட்டத்தில் திராவிடர் கழக மாவட்ட தலைவர் ச.ரகுநாகநாதன், தி.மு.க. நகர செயலர் மா.வீ.செல்வராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.கே.பாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலர் கே.பெருமாள்,  காங்கிரஸ் கட்சி நகர தலைவர் கே.எம்.எஸ்.முசாக்மந்திரி உள்ளிட்டோர் பங்கேற்று தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி வழங்காத மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகம், தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT