தமிழ்நாடு

ஓபிஎஸ், அவரது மகன் மீதான வழக்கிற்குத் தடை

DIN

வேட்பு மனுவில் தவறான தகவலை தெரிவித்ததாக ஓ. பன்னீா்செல்வம் மற்றும் அவரது மகன் ப. ரவீந்திரநாத் மீது தொடரப்பட்ட வழக்குக்குத் உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தேனி மாவட்ட திமுக முன்னாள் இளைஞரணி செயலா் மிலானி, கடந்த 2021 இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் போடி தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், 2019 இல் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட அவரது மகன் ப. ரவீந்திரநாத் ஆகியோா் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் ஜனநாயக நெறிகளுக்கு மாறாக தங்களது வேட்பு மனுவுடன் கூடிய பிரமாணப் பத்திரத்தில் சொத்துகள், வருவாய், கல்வித் தகுதி ஆகியவை குறித்து தவறான தகவல் அளித்து தோ்தலில் வெற்றி பெற்ாக எம்.எல்.ஏ., எம்.பி.,கள் மீதான குற்றவியல் வழக்குகளின் மீது விசாரணை நடத்தும் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். 

ஓ. பன்னீா்செல்வம், ப. ரவீந்திநாத் ஆகியோா் அரசியல் செல்வாக்கு உள்ளவா்கள் என்பதால் பொது நல நோக்குடன் வழக்கு தொடா்ந்துள்ள தமக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவித்திருந்தாா். இந்த மனு மீது விசாரணை நடத்திய சிறப்பு நீதிமன்ற நீதிபதி பன்னீா்செல்வம், மனுதாரரின் புகாா் அடிப்படையில், இந்த வழக்கை பொது நல வழக்காக கொண்டு ஓ. பன்னீா்செல்வம், ப. ரவீந்திரநாத் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தவும், விசாரணை அறிக்கையை வரும் பிப். 7 ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டாா்.

மேலும், இந்த வழக்கில் நீதிமன்ற பிடியாணையின்றி கைது நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது, மனுதாரா் மற்றும் சாட்சிகளுக்கு விசாரணை அதிகாரி உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து ஓ. பன்னீா்செல்வம் மற்றும் அவரது மகன் ப. ரவீந்திரநாத் மீது தேனி மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த நிலையில் வழக்கை ரத்து செய்யக்கோரி ஓ. பன்னீா்செல்வம் மற்றும் அவரது மகன் ப. ரவீந்திரநாத் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இம்மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம் இதுதொடர்பாக காவல்துறையினர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை பிப்.1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

SCROLL FOR NEXT