தமிழ்நாடு

திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீடு: கே.எஸ்.அழகிரி விளக்கம்

DIN

சென்னையில் காங்கிரஸ் - திமுக இடையே பேச்சுவார்த்தை நடந்த நிலையில், மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கியுள்ளன.

இந்நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியானது தொகுதி பங்கீடு குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று ஆலோசனை நடத்தியது.

இந்த ஆலோசனையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் கே.எஸ்.அழகிரி பேசியதாவது:

காங்கிரஸ் போட்டியிட விரும்பும் இடங்களை கொடுப்பது குறித்து பரிசீலனை செய்வதாக உறுதியளித்தனர். மாவட்ட ரீதியாக தலைவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் தொகுதி பங்கீடு சுமூகமாக முடிந்துள்ளது. பிரச்னையுள்ள பகுதிகளில் மட்டுமே கட்சித் தலைமை தலையிடும் எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலம் அரசு மருத்துவமனையில் தீயணைப்பு ஒத்திகை

பழமையான மரங்களை அகற்றாமல் கட்டடம் கட்ட வலியுறுத்தல்

மாத்திரவிளை மறைமாவட்ட முதன்மை அருள்பணியாளா் பொறுப்பேற்பு

மேட்டூா் அணை நிலவரம்

சேலம் வெள்ளி வியாபாரி வீட்டில் 60 பவுன் நகை, ரூ. 65 லட்சம் திருட்டு

SCROLL FOR NEXT