தமிழ்நாடு

காந்தி நினைவு நாள்: ஆளுநர், முதல்வர் மரியாதை

மகாத்மா காந்தியின் 75-வது நினைவு நாளையொட்டி அவரது படத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

DIN


மகாத்மா காந்தியின் 75-வது நினைவு நாளையொட்டி அவரது படத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

நாடு முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மகாத்மா காந்தியின் 75-வது நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை மெரீனா கடற்கரையில் காந்தியின் திருவுருவப்படத்திற்கு ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். உடன் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உள்ளிட்ட அமைச்சர்களும் மரியாதையும் செலுத்தினர்.

இதையொட்டி, அங்கு சர்வோதயா சங்கம் சார்பில் இசை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்திய பிறகு ஆளுநரும், முதல்வரும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இதன் காரணமாக, காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT