தமிழ்நாடு

கோட்சே பெயரை பயன்படுத்த காவல்துறை எதிர்ப்பு...வாக்குவாதத்தில் ஈடுபட்ட மா. கம்யூனிஸ்ட் கட்சியினர்

DIN

நாடு முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மகாத்மா காந்தியின் 75-வது நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை மெரீனா கடற்கரையில் காந்தியின் திருவுருவப்படத்திற்கு ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில், கோவையில் காந்தி நினைவு நாளை அனுசரிக்கும் விதமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. அதில், உறுதிமொழியேற்பில் கோட்சே பெயரையும் இந்து மதவெறி வார்த்தையும் பயன்படுத்த காவல்துறை எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், தந்தை பெரியார் திராவிட கழகத்தினர், விசிகவினர் உள்ளிட்ட அமைப்பினர் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை புறவழிச்சாலையில் இருசக்கர வாகனங்களுக்கு தனிவழி: கைவிட இப்படி ஒரு காரணமா?

வால்பாறை சாலையில் ஒற்றைக் காட்டு யானை: வைரல் விடியோ!

குமரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: 8 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு

அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார் ஜார்க்கண்ட் அமைச்சர்!

பதஞ்சலியின் 14 மருந்துகள் விற்பனை நிறுத்தப்பட்டுவிட்டதா? உச்சநீதிமன்றம் கேள்வி

SCROLL FOR NEXT