தமிழ்நாடு

ஆட்சித்தமிழ் ஐஏஎஸ் அகாடமியின் பொதுத்தமிழ் தேர்வு: முன்பதிவுக்கு இன்றே கடைசி

DIN

ஆட்சித்தமிழ் ஐஏஎஸ் அகாடமியின் சார்பில் நடைபெறும் டிஎன்பிஎஸ்சி பொதுத்தமிழ் போட்டித்தேர்வுக்கான முன்பதிவுக்கு இன்றே (ஜன.31) கடைசி நாள்.

ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி சார்பில் 'டிஎன்பிஎஸ்சி பொதுத்தமிழ் போட்டித்தேர்வு' வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி நடைபெற உள்ளது.  

இது அரசுப் பணிக்கான அறிவுத் தேடல் என்னும் வாசகத்துடன், இணைய வழியில் - மாநில அளவில் மாபெரும் தமிழ் தகுதித் தேர்வாக இத்தேர்வு நடைபெறுகிறது.

இதில் முதலிடத்தைப் பெறுபவருக்கு ரூபாய் 25 ஆயிரமும், இரண்டாம் இடத்தைப் பெறுபவருக்கு ரூபாய் 15 ஆயிரமும், மூன்றாம் இடத்தைப் பெறுபவருக்கு ரூபாய் 10 ஆயிரமும், அடுத்த 50 இடங்களைப் பெறுபவர்களுக்கு ஆறுதல் பரிசாக, தலா 1000 ரூபாயும்... மேலும் பல பரிசுகள் மற்றும் கட்டண சலுகைகளும் அறிவிக்கப் பட்டுள்ளது.

இந்தத் தேர்வுக்கு நுழைவு கட்டணம் 100 ரூபாய் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்தப் போட்டித்தேர்வில் பங்கேற்க விரும்புவோர், நுழைவு கட்டணம் ரூ. 100-ஐ 7550151584, 9962600037, 9962600038 இவற்றில் ஏதேனும் ஒரு  ஜி-பே எண்ணுக்கு செலுத்தி, அதற்கான ஆதாரத்துடன் ‘TNPSC TAMIL ONLINE COMPETITION’ என்று டைப் செய்து தங்களது பெயர் மற்றும் முகவரியை 9962600038-என்ற செல்போன் எண்ணுக்கு வாட்ஸ்அப் அனுப்பி முன்பதிவு செய்ய வேண்டும். 

பதிவு செய்த தேர்வர்களுக்கு, போட்டித்தேர்வுக்கான பாடநூல் (பி.டி.எஃப்) மற்றும் விதிமுறைகள் அடங்கிய வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தும் வாட்ஸ்அப் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் (31.01.2021) ஆகும். டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு எழுதும் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT