முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் வேகமாகக் குறையும் கரோனா: மண்டலவாரியாக பாதிப்பு விவரம்

சென்னையில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 36,800 ஆகக் குறைந்துள்ளது. 

Updated On : 31 ஜனவரி, 2022 at 1:10 PM
சென்னையில் கரோனா பாதிப்பு நிலவரம்
பகிர்:

சென்னையில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 36,800 ஆகக் குறைந்துள்ளது. 

தமிழகத்தில் கரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது. நேற்று(ஞாயிற்றுக்கிழமை) தமிழகத்தில் புதிதாக 22,238 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் 3,998 பேர். 

சென்னையில் மண்டலவாரியாக கரோனா பாதிப்பு விவரங்களை சென்னை பெருநகர மாநகராட்சி வெளியிட்டு வருகிறது. இன்று(திங்கள்கிழமை) காலை வெளியிட்டுள்ள தகவலின்படி, 

Advertisement

சென்னையில் தற்போது 36,800 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை நேற்று 38,799 ஆகவும் நேற்று முன்தினம் 42,017 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன்படி, இரு தினங்களில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை சுமார் 6,000 என்ற அளவில் குறைந்துள்ளது. 

சென்னையில் இதுவரை 8,936 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். மொத்த பாதிப்பு 7,29,463 ஆகவும் குணமடைந்தோர் எண்ணிக்கை 6,83,727 ஆகவும் உள்ளது. 

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக அடையாறு மண்டலத்தில் 3,708 பேரும் தேனாம்பேட்டையில் 3,221 பேரும், கோடம்பாக்கத்தில் 3,184 பேரும் அண்ணா நகரில் 3,104 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மண்டலவாரியாக கரோனா பாதிப்பு விவரம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.