தமிழ்நாடு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: திமுக - காங்கிரஸ் இடையே உடன்பாடு

DIN


நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் இடப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

முதற்கட்ட தகவலில், மதுரை மாநகராட்சியில் மொத்தமுள்ள 100 வார்டுகளில் 9 வார்டுகளை காங்கிரஸ் கட்சிக்கு  ஒதுக்கியுள்ளது திமுக.

அதுபோல, திருப்பூர் மாநகராட்சியில் 60 வார்டுகளில் காங்கிரஸ் கட்சிக்கு 5 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அண்ணா அறிவாலயத்தில் முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இன்று மாலைக்குள் கூட்டணிக் கட்சிகளுடனான இடப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை நிறைவு செய்து வேட்பாளர் பட்டியலை இறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகனுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

வாணியம்பாடி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

SCROLL FOR NEXT