முகப்பு
முதல்வர் மு.க. ஸ்டாலின்
தமிழ்நாடு

தமிழகத்தில் கரோனா கட்டுப்பாடுகளா? - அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:40 AM
முதல்வர் மு.க. ஸ்டாலின்
பகிர்:

தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

தமிழகத்தில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று புதிதாக 1,827 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 11,094 பேர் கரோனா தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையடுத்து தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் செந்தில்குமார், டிஜிபி சைலேந்திர பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர் . 

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு விதிக்க வாய்ப்பில்லை என்றாலும் தற்போதுள்ள கட்டுப்பாடுகள் தொடரும் அல்லது மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →