தமிழ்நாடு

ட்விட்டர் பக்கத்தில் பொறுப்பை மாற்றிய இபிஎஸ்! என்ன தெரியுமா?

DIN

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ட்விட்டர் பக்கத்தில், தனது பொறுப்பை 'தலைமையகச் செயலாளர்' என மாற்றியுள்ளார். 

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் வலுத்து வரும் அதே நிலையில், ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே மோதலும் நீடித்து வருகிறது. 

இந்நிலையில், உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக வேட்பாளா்களுக்கான படிவத்தில் கையெழுத்திடுவது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு புதன்கிழமை ஒரு கடிதம் எழுதினார். 

அதற்கு நேற்று பதில் கடிதம் அனுப்பிய எடப்பாடி பழனிசாமி, பொதுக்குழுவில் சட்டத்திருத்தங்கள் அங்கீகரிக்கப்படாததால் ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டதாகவும் உங்களின்(ஓபிஎஸ்) கடிதம் செல்லத்தக்கது அல்ல என்றும் குறிப்பிட்டார். 

இந்த சூழ்நிலையில்  எடப்பாடி கே பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் சுய விவரக் குறிப்பில் 'அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர்' என்ற 
பொறுப்பை 'தலைமையகச் செயலாளர்' என மாற்றியுள்ளார். 

அதிமுகவில் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியானதால் அவர் பொறுப்பை மாற்றியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. 

மேலும் முன்னதாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அதிமுக பொதுச் செயலாளராக பதவி வகித்தபோது, எடப்பாடி பழனிசாமி தலைமை அலுவலகச் செயலாளராகவும் ஓ.பன்னீர் செல்வம் பொருளாளராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 35 கோடி பறிமுதல்: ஜார்கண்ட் அமைச்சரின் செயலர், பணியாளர் கைது

தேர்தல் பணியிலிருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்!

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பேருந்தை நிறுத்திய பயணிகள்!

சவுக்கு சங்கர் மீது சேலத்திலும் வழக்குகள் பதிவு!

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

SCROLL FOR NEXT