தமிழ்நாடு

அதிமுக வீழ்ச்சியை நோக்கி செல்கிறது: டிடிவி தினகரன்

DIN

அதிமுக வீழ்ச்சியை நோக்கி செல்கிறது இனி, அக்கட்சி வளர்ச்சி அடைவது என்பது சிரமம் என அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

தருமபுரி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் திங்கள்கிழமை தருமபுரியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற அக் கட்சியின் பொதுச் செயலர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறியது: அதிமுக வீழ்ச்சியை நோக்கி செல்கிறது. இனி அக்கட்சிக்கு வளர்ச்சி என்பது சிரமம். இத்தகைய சூழலில், அக்கட்சிக்கு ஒற்றைத் தலைமை ஏற்றாலும், இரட்டைத் தலைமை வகித்தாலும், எத்தனை தலைகள் இருந்தாலும் அக்கட்சி மீளாது. எங்களை பொருத்தவரையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியை மக்களுக்கு வழங்க வேண்டும் என்கிற இலக்கை நோக்கி பயணித்து வருகிறோம். கட்சி தொடங்கி 5 ஆண்டுகள் ஆகியுள்ளது. 

தொடர்ந்து எங்களது சின்னத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று வருகிறோம். தொடர்ந்து எங்களது கட்சி நடவடிக்கைகளில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். கடந்த ஜூன் மாதம் 6-ஆம் தேதி குன்னூரில் தொடங்கி, மாவட்டந்தோறும் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தி வருகிறோம். அதிமுக குறித்து எங்களுக்கு கவலையில்லை. நாங்கள் வேறு கட்சி. அதனால், அந்தக் கட்சியில் பொதுக் குழு நடந்தாலும், நடக்காவிட்டாலும், யார் தலைமை வகித்தாலும் எங்களுக்கு அதுகுறித்து அவசியமில்லை. அண்மையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு குறித்து எனது பழைய நண்பர்கள், அதிமுகவினர் என்னிடம் கூறியதை நான் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தேன். 

அது குறித்து அதிமுகவைச் சேர்ந்த கே.பி.முனுசாமி வழக்கு தொடர்வதாக கூறியிருக்கிறார். கேள்விப்பட்டதை நான் கூறினேன். இது தொடர்பாக அவர், வழக்குத் தொடர்ந்தால், தாரளமாக தொடரலாம். திமுக, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. கரோனா பொதுமுடக்கத்துக்கு பிறகு பொருளாதாரம் சீரடையாத நிலையில், திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் சொத்துவரி 150 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்றுவதாக தெரிவித்தனர். அத் திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. திமுகவினர் கூறியதை நிறைவேற்ற முடியவில்லை. தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க, காவல்துறையும், தமிழக அரசும் சரியான முறையில் செயல்பட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுட்டுவிடுவேன் என மிரட்டி வன்கொடுமை: ரேவண்ணாவுக்கு எதிராக புகார்

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

SCROLL FOR NEXT