என்ன படிக்கலாம்? இளநிலை உளவியல் படிப்புகளுக்கு கூடும் வரவேற்பு 
தமிழ்நாடு

என்ன படிக்கலாம்? இளநிலை உளவியல் படிப்புகளுக்கு கூடும் வரவேற்பு

பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு மாணவர்களிடையே வரவேற்பு அதிகரித்திருப்பதைப் போல, இளநிலை உளவியல் படிப்புகளுக்கும் ஏராளமான விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன.

DIN


சென்னை: கரோனா பொதுமுடக்கக் காலங்களுக்குப் பிறகு, பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு மாணவர்களிடையே வரவேற்பு அதிகரித்திருப்பதைப் போல, இளநிலை உளவியல் படிப்புகளுக்கும் ஏராளமான விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன.

பொதுவாக, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் எல்லாம் வணிகவியல் மற்றும் கணினி அறிவியல் பாடங்களுக்குத்தான் அதிகமான விண்ணப்பங்கள் வரும். அப்பாடப்பிரிவில் சேர்க்கை கிடைப்பதே அரிதாக இருக்கும்.

ஆனால், சென்னையில் தற்போது பெரும்பாலான கல்லூரிகளில் இளநிலை உளவியல் படிப்புகளுக்கு ஏராளமான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றிருப்பதாகவும், அதற்கான கட்-ஆஃப் மதிப்பெண்கள் அதிகரித்திருப்பதாகவும் களநிலவரம் தெரிவிக்கிறது.

இது குறித்து டபிள்யூசிசி கல்லூரியைச் சேர்ந்த லிலியன் ஜாஸ்பர் கூறுகையில், எங்கள் கல்லூரியில் பிஎஸ்சி உளவியல் பாடத்திட்டத்தின் முதல் நேர வகுப்பில் 50 மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ளன. இவற்றுக்கு இதுவரை 891 விண்ணப்பங்கள் வந்துள்ளன. ஆனால் கடந்த ஆண்டு 600 விண்ணப்பங்கள் தான் வந்திருந்தன. ஜூலை இரண்டாம் வாரம் வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இரண்டாம் நேர வகுப்பில் 50 மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ளன என்று தெரிவித்துள்ளார்.

கரோனா மற்றும் அதற்குப் பிந்தைய காலக்கட்டத்தில், உளவியல் ஆலோசர்களுக்கான பணி வாய்ப்புகள் அதிகரித்திருப்பதால், அந்த பாடப்பிரிவுக்கும் வரவேற்பு அதிகரித்துள்ளது என்கிறார்.

கரோனா பொதுமுடக்கக் காலத்துக்குப் பிறகு, பலருக்கும் மன அழுத்தம், உளவியல் பிரச்னைகள், மன நோய் போன்ற பல்வேறு பிரச்னைகளால் அவதியுறுகின்றனர். இதனால், பல அமைப்புகளும், நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் போன்றவை உளவியல் ஆலோசகர்களை பணிக்கு அழைக்கிறார்கள் என்கிறார்.

இதே நிலைதான் எத்திராஜ் கல்லூரியிலும். அங்கிருக்கும் பிஎஸ்சி உளவியல் பாடப்பிரிவில் 50 மாணவர்  சேர்க்கைக்கு 800 விண்ணப்பங்கள் வந்துள்ளன. வழக்கமாக 500 விண்ணப்பங்கள் வரும். இங்கு முதுநிலை உளவியல் படிப்பும் வழங்கப்படுகிறது. இங்குப் பிடித்த 90 சதவீத மாணவர்களுக்கு பணி வாய்ப்பு உறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும், இதனால், இளநிலை உளவியல் படிப்புக்கு கூடுதல் வரவேற்பு கிடைத்திருப்பதாகவும் கல்லூரி தலைமை பேராசிரியர் கோதை கூறுகிறார்.

சில கல்லூரிகள், உளவியல் பாடத்திட்டத்தில் மேலும் பல புதிய பாடங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

SCROLL FOR NEXT