கூடலூர் அடுத்துள்ள தேவர்சோலை பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலய வளாகத்துக்குள் நுழைந்த காட்டு யானை 
தமிழ்நாடு

கிறிஸ்தவ தேவாலய வளாகத்துக்குள் நுழைந்த காட்டு யானை: மக்கள் அச்சம்

கூடலூர் அடுத்துள்ள தேவர்சோலை பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலய வளாகத்துக்குள் நுழைந்த காட்டு யானையை பார்த்து அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

DIN


கூடலூர்: கூடலூர் அடுத்துள்ள தேவர்சோலை பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலய வளாகத்துக்குள் நுழைந்த காட்டு யானையை பார்த்து அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

நீலகிரி மாவட்டத்தில் அவ்வப்போது பெய்து வரும் மழையால் பசுமையாக காணப்படும் வனப் பகுதியில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. காட்டு யானைகள் சாலைகளில் உலவி வருவதால் வாகன ஓட்டிகள் மிகவும் கவனமாக செல்ல வேண்டும். யானையுடன் புகைப்படம் எடுக்க முயற்சிக்கக் கூடாது என வனத் துறையினா் தெரிவித்துள்ளனர்.  

இந்நிலையில், நீலகிரி மாவட்டம், கூடலூர் அடுத்துள்ள தேவர்சோலை பகுதியில் உள்ள 8 ஆவது மைல் பகுதியில் அமைந்துள்ள கிரிஸ்தவ தேவாலய வளாகத்துக்குள் நுழைந்த  காட்டு யானை ஆலயத்தை சுற்றி நடந்ததை பார்த்து அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.

நீண்ட நேரத்திற்குப் பிறகு யானை தேயிலைத் தோட்டம் வழியாக காட்டுக்கு சென்றுவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிப்ரவரி மாதப் பலன்கள் - துலாம்

பிப்ரவரி மாதப் பலன்கள் - கன்னி

பெருமாநல்லூர் அருகே லாரி மீது கார் மோதி விபத்து: இருவர் பலி!

பிப்ரவரி மாதப் பலன்கள் - சிம்மம்

பிப்ரவரி மாதப் பலன்கள் - கடகம்

SCROLL FOR NEXT