தமிழ்நாடு

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நரசிம்ம பிரம்மோற்சவம் தொடக்கம்

DIN

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் நரசிம்ம பிரம்மோற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குகிறது சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்திருக்கும் பார்த்தசாரதி கோயில். இங்கு யோக நரசிம்மர் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

இக்கோவிலில் ஆண்டுதோறும் பார்த்தசாரதி சுவாமிக்கு சித்திரை மாதமும், நரசிம்மருக்கு ஆனி மாதமும் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான நரசிம்ம பிரம்மோற்சம்  இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஆனி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தர்மாதி பீடம் புறப்பாடு, சாலைகளில் திருவீதி உலா என பார்த்தசாரதி கோயில் திருவிழாக் கோலம் பூண்டுள்ளது. பக்த கோடிகள் அவரவர் இல்லத்தில் இருந்து சிறப்பு வழிபாடுகளோடு சுவாமி நரசிம்மர் பெருமாளை வழிபட்டு வணங்கி ஆர்த்தி எடுத்துக் கொண்டனர்.

இரண்டாம் நாள் விழாவான வெள்ளிக்கிழமை சிம்ம வாகனத்தில் உற்சவர் தெள்ளிய சிங்கர் அருள்பாலிக்கிறார். சனிக்கிழமை கருட சேவையும், கோபுர வாசல் தரிசனமும் நடைபெறவிருக்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

அன்பே அனா டி அர்மாஸ்!

முத்தையா இயக்கத்தில் விஷால்?

ஐபிஎல் தொடரிலிருந்து நாடு திரும்பும் இங்கிலாந்து வீரர்கள்; எந்த அணிக்கு பாதிப்பு?

குருப்பெயர்ச்சி ஒருவருக்கு பலமா? பலவீனமா?

SCROLL FOR NEXT