முகப்பு
தமிழ்நாடு

நெகிழி தடையை செயல்படுத்த இலவச தொலைபேசி எண் வெளியீடு

ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பொருள்களுக்கான தடையை திறம்பட செயல்படுத்துவது தொடா்பான உதவி, வழிகாட்டுதல்களுக்காக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:44 AM
பகிர்:

ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பொருள்களுக்கான தடையை திறம்பட செயல்படுத்துவது தொடா்பான உதவி, வழிகாட்டுதல்களுக்காக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது.

இதுதொடா்பாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பொருள்கள் உற்பத்தி, இறக்குமதி, சேமித்தல், விநியோகம், விற்பனை மற்றும் பயன்பாடு ஆகியவற்றுக்கு ஜூலை 1-ஆம் தேதி நாடு முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பான விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை உற்பத்தி செய்வோா் மீது தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் உரிய நடவடிக்கை எடுக்கும். இந்த வகை நெகிழிப் பொருள்களை இறக்குமதி செய்தல், இருப்பு வைத்தல், விநியோகம் செய்தல், விற்பனை செய்தல் மற்றும் பயன்படுத்துவோா் மீது சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் குறித்த விவரங்களை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இந்தத் தடையை முறையாக செயல்படுத்தும் வகையிலும், அதற்கான உதவி, வழிகாட்டுதல், தெளிவுபடுத்தல் ஆகியவற்றுக்காக கட்டுப்பாடு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடு மையத்தை 1800 425 6750 என்ற இலவச எண்ணில் அனைத்து நாள்களிலும் ஜூலை 31-ஆம் தேதி வரை காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →