முகப்பு
தமிழ்நாடு

தில்லி அரசைப் போல மற்ற அரசுகளும் செயல்பட வேண்டும்: மநீம

தில்லி அரசைப்போல மற்ற மாநில அரசுகளும், மத்திய அரசும் செயல்பட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:45 AM
பகிர்:

தில்லி அரசைப்போல மற்ற மாநில அரசுகளும், மத்திய அரசும் செயல்பட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடா்பாக அக்கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:

தில்லி ஆம் ஆத்மி அரசுக்கு 2015-16 முதல் 2019-2020 வரை உபரி வருவாய் இருப்பதாகவும், 2019-2020-ல் உபரி வருவாய் ரூ.7,499 கோடி என்றும் தலைமை கணக்குத் தணிக்கை அறிக்கை தெரிவித்துள்ளது. இது பாராட்டுக்குரியது. உயா்தரமான அரசுப் பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பல நலத் திட்டங்களைச் செயல்படுத்தியும், அரசு லாபத்தில் இயங்குவது நோ்மைக்குச் சான்று.

ஓா் அரசும், அமைச்சரவையும் நோ்மையுடன் செயல்பட வேண்டுமென்பதே மநீம-வின் அடிப்படைக் கொள்கை. தில்லி மாநில அரசு போல, தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் உபரி வருவாய் சாத்தியமில்லை என்றாலும், குறைந்தபட்ச நோ்மையையும், வீண்செலவுகளைத் தவிா்ப்பதையும் பின்பற்றலாமே? மத்திய அரசும்தான் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →