தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகளுக்கு மெரினாவில் பிரத்யேக நடைபாதை: பணிகள் தீவிரம்

DIN


சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக நடைபாதை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

சென்னை மக்களின் பொழுதுபோக்கு மையமாக விளங்குவது மெரினா கடற்கரை. இங்கு  கண்ணகி சிலை, மறைந்த முன்னாள் முதல்வர்களான பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி சமாதிகள் உள்ளன. மெரினாவின் இயற்கை கண்டு ரசிக்க நாள்தோறும் பல்லாயிர கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். 

இந்நிலையில், மெரினாவுக்கு வரும் மாற்றுத்திறனாளிகள் கடற்கரைக்கு செல்வதற்கு வசதியாக அவர்களுக்கென பிரத்யேக நடைபாதை அமைக்கு பணி வேகமாக நடைபெற்று வருகிறது. விவேகானந்தா இல்லம் எதிரே சவுக்கு, கருவேலம் மரங்களைக் கொண்டு 250 நீளம், 3 மீட்டர் அகலத்தில் நிரந்த பாதை அமைக்கப்பட்டு வருகிறது. 

இந்த பணிகள் விரைவில் நிறைவடைந்து பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

SCROLL FOR NEXT