சென்னை ராயப்பேட்டையில் 144 தடை உத்தரவு
அதிமுகவின் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் மோதிக் கொண்ட நிலையில், சென்னை ராயப்பேட்டையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவின் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் மோதிக் கொண்ட நிலையில், சென்னை ராயப்பேட்டையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்துக்குத் தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தீா்ப்பு வழங்கியுள்ள நிலையில், சென்னை உயா்நீதிமன்றமும் பொதுக்குழுவை கட்சி விதிகளுக்கு உள்பட்டு நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு திங்கள்கிழமை காலை 9.15 தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பொதுக்குழுவை புறக்கணித்து அதிமுகவின் ஓபிஎஸ் இன்று கட்சித் தலைமை அலுவலகத்திற்கு வந்தார். அங்கு பூட்டப்பட்டிருந்த கதவை உடைத்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அவரை உள்ளே அழைத்துச் சென்றனர்.
இதையும் படிக்க | தடையை உடைத்து அதிமுக அலுவலகத்தில் நுழைந்த ஓபிஎஸ்: ஜெயலலிதா, எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை!
அப்போது, அங்கிருந்த இபிஎஸ் ஆதரவாளர்களும், ஓபிஎஸ் ஆதரவாளர்களும் மோதிக் கொண்டதில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அதிமுக ஆதரவாளர்களின் வாகனங்கள், பொதுமக்களின் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.
இதையும் படிக்க | அதிமுக தலைமை அலுவலகத்தில் இபிஎஸ்-ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மோதல்
இதனைத் தொடர்ந்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அதிமுக தலைமை அலுவலகத்தில் காவலர்கள் குவிக்கப்பட்டு தடியடி நடத்தப்பட்டு கூட்டத்தை கலைத்தனர். மேலும், ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகம் அமைந்திருக்கும் பகுதியில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.