தமிழ்நாடு

அதிமுக தலைமை அலுவலகத்தில் இபிஎஸ்-ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மோதல்

ராயபேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் இபிஎஸ்-ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

DIN

சென்னை: ராயபேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் இபிஎஸ்-ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அதிமுக அலுவலகம் சென்றுகொண்டிருக்கும் நிலையில் இபிஎஸ்-ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

கட்டை, கம்புகளை வைத்தும், கற்களை வீசி எறிந்தும் இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட்டுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பு ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் பதற்றத்தை தணிக்க காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்,

இபிஎஸ் பொதுக்குழுவிற்கு வானகரம் செல்லும் நிலையில்,  ஓ. பன்னீர்செல்வம் தனது இல்லத்தில் இருந்து  ராயபேட்டை அதிமுக தலைமை அலுவலகம் புறப்பட்டு சென்றுள்ளார். அங்கு தனது ஆதாரவாளர்களை சந்திக்க உள்ளார்.

இன்று காலைமுதல் அதிமுக தலைமை அலுவலகம் பூட்டியுள்ள நிலையில் ஓ. பன்னீர்செல்வம் தனது இல்லத்தில் இருந்து  புறப்பட்டு சென்றுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநிலங்களவை தோ்தல்: சுயேச்சை மனு தாக்கல்

இனி மாணவா்களுக்கு மத்தியில் நல்லகண்ணு! தானமாகும் உடல் பாடமாவது எப்படி?

விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் : இந்தியா-இஸ்ரேல் உறுதி

கௌரவ விரிவுரையாளா்களுக்கு ரூ.5 ஆயிரம் ஊதிய உயா்வு: அமைச்சா் கோவி. செழியன் அறிவிப்பு!

பண மோசடி வழக்குகளில் ப.சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு அனுமதி

SCROLL FOR NEXT