தமிழ்நாடு

இபிஎஸ் டிவிட்டர் பக்கத்தில் இடைக்காலப் பொதுச்செயலாளர் என மாற்றம்

எடப்பாடி பழனிசாமியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

DIN

எடப்பாடி பழனிசாமியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் இன்று நடைபெற்று முடிந்தது. இந்தக் கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

அதிமுக பொருளாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவிகளில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் நீக்கப்படுவதாக சிறப்பு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, கட்சியின் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் என்பதை இடைக்கால பொதுச் செயலாளர் என மாற்றினார்.

அதேபோல், அதிமுகவின் டிவிட்டர் பக்கத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ் இருந்த புகைப்படத்தை நீக்கிவிட்டு இபிஎஸ் மட்டும் இருக்கும் புகைப்படத்தையும் மாற்றியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரப்பெற்றோம் (15.09.2025)

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 28 மாவட்டங்களில் மழை!

ரோபோ சங்கர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

கனகாம்பரமும் தாவணியும்... ஸ்ரவந்தி சொக்கராபு!

ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து ஜெமிமா ரோட்ரிக்ஸ் விலகல்!

SCROLL FOR NEXT